ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோயில் : தல வரலாறு

அன்றொரு நாள் பாற்கடலில் திருமால் பள்ளி கொண்டிருந்தார். காலகாலமாக பாற்கடலில் பள்ளிகொண்டிருந்த பெருமாள் அன்று மிக கணமாக இருந்தார். அன்று ஆதிசேஷன், சுவாமி இன்று ஏனோ நீங்கள் கணமாக இருக்கிறீர்கள் என்று உணர்கிறேன் என்று கூறினார். அதற்கு ஆமாம் என்று சொன்னார்

என்ன காரணம் என்று அறியலாமா சுவாமி!!!

கைலாயத்தில் சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறார் அதை மனக்கண்ணால் கண்டேன் அதனால் மனதில் ஆனந்தம் கொண்டு நான் பாரம் ஆனேன் என்று கூற, அப்போது எனக்கும் அந்த ஆனந்தத்தை தரவேண்டும் என்று சொல்ல மறுபடியும் கைலாயத்தின் ஆன்ந்த தாண்டவத்தை பெருமாள் மனதில் நினைக்கும் பொழுது தனது கண்களிலிருந்து கண்கள் ஆனந்த துளியாய் இரண்டு துளி பாற்கடலில் விழ அந்த இரண்டு துளிகளும் பெண்மணிகளாக மாறியது.

இந்த இரண்டு பெண்மணிகளும் ஆனந்தவள்ளி, சுந்தரவள்ளி என்று பெயர் பெற்றார்கள். அந்த இரண்டு பெண்மணிகளும் பெருமாளை நோக்கி சுவாமி எங்கள் பிறப்பின் ரகசியம் என்ன என்று கேட்கும் பொழுது பெருமாள் வந்து இவ்வாறு விளம்பினார். அது என்னவென்றால், ஆனந்தமே என் மனதில் வந்து குடிகொண்டு இருக்கும் போது நீங்கள் இருவருமே பிறந்ததின் காரணமாக ஆனந்தவள்ளி, சுந்தரவள்ளி என்று பெயர் பெற்று வருவீர்கள் என்று சொன்னார்.

இந்த ஆனந்தம் உங்களில் மட்டுமின்றி எங்களிலும் நிலைத்து நிற்க வேண்டும் என்று அவர்கள் விளம்பிய பொழுது நீங்கள் இருவரும் சிவபெருமான நோக்கி தவம் புரியுங்கள் அவ்வாறு புரிந்தால் நீங்கள் கேட்டது கிடைக்கும் என்றார் பெருமாள்

நாங்கள் தவம் புரிவதற்கு இடம் சொல்லுங்கள் என்று அவர்கள் கேள்வியை முன் வைத்தனர். அதற்கு சிவபெருமான் உறைந்திருக்கும் திருக்கைலையில் வந்து தவம் புரியுங்கள் என்று திருமால் பதிலுரைத்தார். திருக்கைலாயத்தில் ஆனந்தவள்ளி, சுந்தரவள்ளி இரண்டு பேருமே தவம் புரியும் பொழுது ஆனந்தவள்ளிக்கு கைலாயத்தில் கொஞ்சம் தவவலிமை அதிகமாகவும், சுந்தரவள்ளிக்கு கொஞ்சம் தவவலிமை குறைவாகவும் காணப்பட்டது.

அப்போது சிவபெருமான் கைலாயத்தில் இருவருக்கும் தரிசனம் தந்து ஈசனம், தர்புஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகியவை கூடிய ஐந்து முகத்தினோடு அருமுகமும் சேர்த்து ஆறுமுகமாக காட்சியளிக்கும் பொழுது தங்களை இறைவன் மணக்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்குமே ஏற்பட்டது. அதனால் சுவாமி தங்களை மணபுரிந்துகொள்ள வேண்டும் என்று இருவருமே ஒருசேரக் கேட்டனர். அப்பொழுது சுவாமி ”அருமுகம் கொண்ட முருகக் கடவுள் அவதாரம் எடுக்கப்போகிறேன்” அப்பொழுது இந்த ஆறுமுகம் இருவரையும் மணம் புரிவேன் என்று சொல்லி தவலிமை அதிகம் உள்ள ஆனந்தவள்ளியை தேவலோகத்தில் தேவேந்திரனுடைய மகளாய் வளர்ந்து தெய்வானை என்று பெயர் பெற்று வருவாயாக அப்போது உன்னை மணம்புரிவேன் என்றும்,

சுந்தரவள்ளிக்கு கொஞ்சம் தவவலிமை கொஞ்சம் குறைவாக இருந்ததினால் மண்ணுலகத்தில் வந்து பிறந்து வள்ளி குகையில் வள்ளி என்று பெயர் பெற்று வருவாயாக அப்போது நானே உன்னை மணம் புரிவேன் என்று கூறினார்.

அவர் கூறியவாரே அதே தருணத்தில்தான் முருகப்பெருமான் வள்ளியை வந்து மணந்து கொண்டார் என்று வள்ளி வரலாறு சொல்லப்படுகிறது.

ஸ்ரீ வள்ளியம்மன் திருக்கோயில் : இறை நிகழ்வுகள்